Tuesday 2nd of June 2026

English Tamil
Advertiesment


மைத்திரியின் பிரசுரத்தில் மகள் இருந்ததாக கூறிய ஜெனவனிதாவுக்கு TID அழைப்பு!


2020-01-09 14868

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் தேர்தல் பிரசார துண்டுப் பிரசுரத்தில் காட்சியளித்ததாகக் கூறப்படும் போர்க்காலத்தில் காணால்போன ஜெரோமி என்ற சிறுமியின் தாயாரான காசிப்பிள்ளை ஜெயவனிதா விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

இதற்கயை எதிர்வரும் 13ஆம் திகதி கொழும்பிலுள்ள பயங்கரவாத விசாரணைப் பிரிவில் ஆஜராகுமாறு அவருக்கு இன்று வியாழக்கிழமை பயங்கரவாத விசாரணைப் பிரிவின் வவுனியா கிளையின் ஊடாக கடிதம் அளிக்கப்பட்டுள்ளது.

இறுதிக்கட்ட யுத்த்தின் போது 2009 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 4 ஆம் திகதி இரட்டை வாய்க்கால்பகுதியில் வைத்து தனது மகள் காசிப்பிள்ளை ஜெரோமிகாணாமல் போனதாக அவரது தாய்காசிப்பிள்ளை ஜெயவனிதா காணாமல் போனோர் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்திருந்தார்.

எனினும் கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஜனாதிபதி தேர்தலுக்காக வெளியிடப்பட்ட நூறுநாட்களில் புதிய நாடு என்ற துண்டுப்பிரசுரத்தில் ஜனாதிபதி மைதிரிபால சிறிசேனவுடன் தனது மகள்காசிப்பிள்ளை ஜெரோமி நிற்பதை தாம் கண்டு கொண்டதாக அவர் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாக ஜனாதிபதி மைதிரிபால சிறிசேனவுடன் கலந்துரையாடிய போதிலும் தனது மகள்தொடர்பில் எந்தவொரு தகவலும் கிடைக்கவில்லையென அவர் குறிப்பிட்டிருந்தார்.

காணாமல் போன தனது மகள் தொடர்பில் பல ஆணைக்குழுக்களும், புலனாய்வு பிரிவினரும் விசாரணைகளை மேற்கொள்கின்ற போதிலும் உரிய தீர்வு கிடைக்கவில்லையென கவலைவெளியிட்டுவரும் வவுனியாவில் காணாமல் போனோரின் உறவினர்களால் முன்னெடுக்கப்பட்டுவரும் கவனயீர்ப்பு போராட்டத்திற்கும் தற்போது தலைமைவகித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

Advertiesment